மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களை பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டையை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள்,
அரசின் உதவிகளை பெறுவதற்காக அலைய வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்றிதழ்களை பெறுவதற்காக, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற விஷயங்களுக்கு தீர்வு காண்பதற்காக, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டை, அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள்,
'ஆதார்' எண் போல், இந்த அட்டையிலும், ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். இந்த அட்டையில், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றிய அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த அடையாள அட்டையை வைத்து, அரசின் சேவைகளை மாற்றுத்திறனாளிகள் பெறலாம். வரும் டிசம்பர் மாதம் முதல், இந்த அடையாள அட்டைக்கான பணிகள் துவங்கவுள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a comment