Labels

rp

Blogging Tips 2017

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 2015-க்கான பிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆக. 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில், செப்டம்பர், அக்டோபர் 2015 பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆக. 13 முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆக. 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களும், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a comment