Labels

rp

Blogging Tips 2017

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிஅவர் மேலும் பேசியதாவது:

மாணவர்கள் வறுமை காரணமாக தங்களுடைய படிப்பை இடையில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் 14 விதமான விலையில்லாப் பொருள்களை வழங்கி மாணவர்கள் கல்வியைத் தொடர வ
ழிவகுத்துள்ளார். கல்வி வளர்ச்சி அடைந்தால் தான் சுகாதாரம் வளரும். அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும் என்ற அடிப்படையில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீத நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1,163 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 150 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுள்ளன. வருகிற காலங்களிலும் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சிறந்த நிலையில் இருக்கும் என்றார் அமைச்சர் கே.சி.வீரமணி.

No comments:

Post a Comment