Labels

rp

Blogging Tips 2017

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழந்தவர்களுக்கு 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்

இயற்கை பேரிடர் வரலாறு காணாத பாதிப்பை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்படுத்தியது.வெள்ளத்தால் வீடு, கால்நடை, உடமைகளை இழந்து மக்கள் தவிர்த்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி சான்றிதழ்களும் நாசமாயின.பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி சான்று வழங்க அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரு வாரம் சிறப்பு முகாம் நடத்தி கட்டணமின்றி மாற்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு முகாம் 14–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.இந்த சிறப்பு முகாம்கள் சென்னை மாவட்டத்தில்
54 மேல் நிலைப்பள்ளிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 மேல்நிலைப் பள்ளிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 29 மேல் நிலைப்பள்ளிகளிலும், கடலூர் மாவட்டத்தில் 15 மேல்நிலைப்பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. 4 மாவட்டங்களிலும் 132 பள்ளிகளில் முகாம் நடத்தப்படுகிறது.கல்வி சான்று சிறப்பு முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–முதல்–அமைச்சர் உத்தரவுப்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் கல்வி சான்றுகளை இழந்துள்ள பொது மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்திட உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.கல்வி சான்று நகல் கட்டணமின்றி வழங்க கோரும் விண்ணப்ப படிவங்கள் தேவையான எண்ணிக்கையை உத்தேசமாக கணக்கிட்டு அச்சிட்டு முன்னதாக மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.ஒவ்வொரு சிறப்பு முகாமிற்கும் ஒரு பொறுப்பு அதிகாரி ஒரு கணினி இயக்குபவர் நியமிக்கப்பட வேண்டும்.சிறப்பு முகாமிட்டவரிடம் பொது மக்களுக்கு படிவம் நிரப்பி கொடுக்க மற்றும் தேவையான உதவிகளை செய்ய கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.தேவைப்பட்ட மையங்களுக்கு ஜெனரேட்டர் வசதி செய்து தரப்பட வேண்டும். முகாம் நடக்கின்ற வளாகத்தில் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்து தரவேண்டும்.தினமும் பெறப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.இந்த பணியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு இயக்குனர் கண்ணப்பன் அதில் கூறியுள்ளார்.முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டு அதனை சரி பார்த்து மாற்று சான்றிதழ் ஒரு வாரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.சென்னையில் முகாம்கள் நடக்கும் பள்ளிகள் விவரம் வருமாறு:–சென்னை மேல் நிலைப்பள்ளி–எம்.ஜி.ஆர். நகர், பி.சி.கே.ஜி. மேல்நிலைப்பள்ளி– கோடம்பாக்கம், வித்யோதயா மேல்நிலைப்பள்ளி– தி.நகர், சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி– சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி– மடுவின் கரை, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி– ஜோன்ஸ்ரோடு சைதாப்பேட்டை.அவ்வை பெண்கள் மேல் நிலைப்பள்ளி, குமார ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ.

மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி– ராயப்பேட்டை.லேடி விலிங்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி– திருவல்லிக்கேணி, லேடி சிவகாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி– சென்னை–1, புனித எபாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி–மயிலாப்பூர், ஜெய கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி– சூளைமேடு.இந்து மேல்நிலைப்பள்ளி– திருவல்லிக்கேணி, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி– தண்டையார்பேட்டை, முத்தையால் பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி– புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி– ராயபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி– வில்லிவாக்கம், ஜி.எம்.டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி– சவுகார்பேட்டை, லூர்து மேல்நிலைப்பள்ளி– பெரம்பூர்.புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைபள்ளி– சூளைமேடு, சென்னை மேல்நிலைப் பள்ளி–எம்.எச். சாலை பெரம்பூர், யு.ஏ.ஆர். ராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி–விருகம்பாக்கம், அழகப்பா மெட்ரிக் பள்ளி–புரசைவாக்கம், பாபா மெட்ரிக் பள்ளி– கோடம்பாக்கம், பாரத வித்யாலய மெட்ரிக் பள்ளி– அயனாவரம்.கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி– சைதாப்பேட்டை, டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி–எருக்கஞ்சேரி, ஈவ் மெட்ரிக் பள்ளி–திருவல்லிக்கேணி, குட்ஹோப் மெட்ரிக் பள்ளி–அரும்பாக்கம், குருநானக் மெட்ரிக் பள்ளி– வேளச்சேரி, ஜெயகோபால் கரோடியா இந்து மெட்ரிக் பள்ளி–மேற்கு மாம்பலம், ஜெயகோபால் கரோடியா– சென்னை–82, ஜெயகோபால் கரோடியா–அண்ணாநகர், கலைமகள் வித்யாலய மெட்ரிக் பள்ளி– ராயபுரம், ருக்மணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி– கீழ்பாக்கம் உள்ளிட்ட 54 பள்ளிகளில் நடக்கிறது.

No comments:

Post a Comment