Labels

rp

Blogging Tips 2017

ஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன்னும் 5 நாள்களே உள்ளன

மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்களில் மனுஅளிக்க, இன்னும் 5 நாள்களே உள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், உடைமைகள், ஆவணங்கள் போன்றவை சேதம் அடைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

 28-ஆம் தேதி கடைசி நாள்: இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்கள், இழந்த ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 14-ம் தேதி முதல், வரும் 28-ம் தேதி வரை நடத்த அரசு உத்தரவிட்டது.
 அதன்படி சென்னையில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் மழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தோர் நகல்களைப் பெற, புதன்கிழமை 9-வது நாளாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை, வேலைவாய்ப்புத் துறை, பொதுத் துறை எரிவாயு, வட்டாரப் போக்குவரத்துத் துறை, பத்திர பதிவுத் துறை, பொதுத் துறை வங்கிகள், சென்னை மாநகராட்சி, வாக்காளர் அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள், உணவுப்பொருள் வழங்கல் ஆகிய துறைகள் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 இதுவரை 39,181 மனுக்கள்: அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு முகாம்களில் ஆவணங்களை இழந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதுவரையில், மொத்தம் 39,181 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு ஒப்புதல் சீட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 5 நாள்களே சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் இதனை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment