Labels

rp

Blogging Tips 2017

'எல்நினோ' என்றால் என்ன?

 .எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு 'சிறு பையன்' என்று பொருள். பரந்த வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல், உலகிலேயே அதிக சூரிய ஒளியை பெறுகிறது. இந்த ஒளி, வெப்பமாக கடலினுள் சேர்த்து வைக்கப்படுகிறது. பொதுவாக, பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி,
வடகிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் இருந்து வெப்ப மேற்பரப்பு உடைய நீரை மேற்கு நோக்கி கொண்டு சேர்க்கிறது. இதற்கிடையே, கிழக்கு பசிபிக் பகுதியிலிருக்கும் குளிர்ந்த நீர், மேற்பரப்பிற்கு வரும். இது பூமத்திய ரேகை பகுதியில் சேர்ந்து கிழக்கு மேற்கு பகுதியில் வெப்பநிலை மாறுபாட்டை உருவாக்கும்.

பசிபிக் காற்று, வடதுருவத்தில் வசந்த காலம் துவங்கியதும், தனது வலிமையை இழக்கும். குறைந்த அளவிலான தண்ணீர் மேற்கு நோக்கி தள்ளப்பட, மத்திய, கிழக்கு பசிபிக் பகுதியிலுள்ள நீர் வெப்பமேற துவங்கும். ஆசியாவில் கோடை மழை ஏற்படும்போது, இந்த காற்று மீண்டும் வலிமை பெறும். இதனால் வெப்பச் சமநிலை மீண்டும் பராமரிக்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹம்போல்ட் நீரோட்டம், தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரமாக, வடக்கு திசையில் நகர்ந்து பூமத்திய ரேகை பகுதிக்கு சென்று விடும். இதனால், வெதுவெதுப்பான வறண்ட காற்று பெரு, ஈக்வேடார் போன்ற நாடுகளின் கரையோரத்தை அடையும்.

இந்த வெப்ப நீரோட்டம் கடலின் அடியில் இருக்கும் குளிர்ந்த நீரை மேலே கிளப்பிவிடும். இதுதான் 'எல் நினோ' என அழைக்கப்படுகிறது. பொதுவாக 3 முதல் 7 ஆண்டு இடைவெளியில் இந்த வெப்பநிலை மாற்றம் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment


web stats

web stats