Labels

rp

Blogging Tips 2017

பொதுத்தேர்வு பட்டியல் நாளை வரை அவகாசம்



திருப்பூர்: வரும், 2016, மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர் பெயர் பட்டியலை, பள்ளிகள் வாரியாக தயாரித்து, தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி கல்வித்துறை ஏற்கனவே, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இம்மாதம், 9க்குள் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை, முழு விவரங்களுடன் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், சமீபத்தில் பெய்த கனமழையால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், மாணவர் பட்டியல் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இப்பணியை வரும், 15க்குள் (நாளைக்குள்) முடிக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment