Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் அரசாணை வெளியிட தடை

'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய திட்டங்களை துவக்க, அரசாணை பிறப்பிக்க கூடாது' என, அனைத்து துறை செயலர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதி உள்ளார்.அனைத்து துறை செயலர்களுக்கும், ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதம்:இதற்கு முன் நடந்த தேர்தல்களின்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, இரு நாட்களுக்கு பின், முன் தேதியிட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக, புகார் எழுந்தது. அதுபோன்ற புகார் இம்முறை வரக்கூடாது. இவ்வகை புகார்களை தவிர்க்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், துறை அலுவலர்கள், அரசாணை பதிவேடில், கடைசியாக பதிவு செய்யப் பட்டுள்ள அரசாணை பக்கத்தை, நகல் எடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, கையெழுத்திட்டு அனுப்பி வைக்க வேண்டும்.


இது, தவறான குற்றச்சாட்டுகள் எழுவதை தவிர்க்க உதவும்.துறை செயலர்கள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில், தலைமை அலுவலகத்தில் இல்லையென்றால், அவருக்கு கீழ் உள்ள அதிகாரி, அப்பணியை செய்ய வேண்டும். அரசாணை பதிவேடு நகல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்குள் வந்து சேர வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. 

No comments:

Post a Comment