Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மத்திய அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி ஜனவரி 1 முதல் வழங்க உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப் படை சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.
இது குறித்து மத்திய நிதியமைச் சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘மத்திய அரசு ஊழியர்களின்
அடிப்படை சம்பளத்தில் இருந்து 119 சதவீதம் உயர்த்தப்பட்ட அக விலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இதனை கூடுதலாக 6 சதவீதம் உயர்த்தி, 125 சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப் படி தொகை 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசில் பணிபுரியும் 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பய னடைவர்.

No comments:

Post a Comment