Labels

rp

Blogging Tips 2017

இந்தியாவின் குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போன் ரூ.888-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாகோஸ் (Docoss) என்ற செல்போன் நிறுவனம் டாகோஸ் எக்ஸ் 1 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போனுக்காக ஆன்லைன் ஆர்டர்கள் பெறப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்ரீடம் 251 போன் போலல்லாமல் சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டாகோஸ் போன்கள், மே மாதம் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த போன் 4 இன்ச் தொடு திரையுடன், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 2 எம்பி பின்பக்க கேமிராவும், முன்பக்க விஜிஏ கேமிராவும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment