Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மின் கட்டணம்-திமுக,அதிமுக வாக்குறுதிகள் எது நன்மை?

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் "மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 60 சதவிகிதம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படும் எனவும் தனது விளம்பரங்களில் திமுக தெரிவித்திருந்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்கட்டணப் பட்டியல்படி, 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் ரூ.1,330 மின்கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால் ஒரு யூனிட் அதிகமாக பயன்படுத்தினாலும், ரூ.797அதிகரித்து ரூ.2,127 செலுத்த வேண்டும். அதுவே 1000 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.5,420 மின் கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.2,660 செலுத்த வேண்டிய இடத்தில் ரூ.5,420செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ரூ.2,760 அதிகமாக மக்களுக்கு செலவாகிறது. இரு மடங்கு அதிக பயன்பாட்டுக்கு நான்கு மடங்கு அதிகமாக மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த செலவோடு ஒப்பிட்டால், 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது மிக மிகச் சொற்பமாகத் தெரிகிறது. தற்போது இருக்கும் மின்கட்டண முறையை மாற்றி மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை அமலானால், மக்கள் பயனடைவார்கள் என்பது தெளிவாகிறது.

No comments:

Post a Comment