Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

தமிழகத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி தரவரிசைப் படியலை வெளியிட்டார்.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 13 பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 12-ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. கடைசி நாளான ஜூன் 11-ம் தேதி வரை சுமார் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் நாமக்கலைச் சேர்ந்த தீனேஷ்வர் என்ற மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார். வரும் 27-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

www.tnau.ac.in என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment