Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்

பள்ளிகல்விதுறை அறிவிப்புகள் :

* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின்

குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்


உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்

  • கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மையம் கோவையில் நிறுவ 1 கோடி ஒதுக்கீடு.

  • உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்கலைகழகங்களால் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி முறைப்படிப்புகளுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் ஒரே வகையான பாடத்திட்டங்களை தயாரிக்க 5 கோடி ஒதுக்கீடு.

  • கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பேரிடர் மீட்பு மேலாண்மை இணையத்தள மையம் ஏற்படுத்த 50 லட்சம் ஒதுக்கீடு.

  • கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு திறன் வளர்த்தல் மையம் 10 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

  • திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் செவி மற்றும் பேச்சுத்திறன் குறைப்பாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு இளங்கலை பட்டப் பாடப்பிரிவு துவங்க 76 லட்சம் ஒதுக்கீடு.

  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மொழி பரிமாற்ற மேம்பாடு குறித்து இடைவெளி நிரப்பு பயிற்சிக்கு புத்தகங்கள் 12.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

  • சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் பல்வேறு மேம்பாடு திட்டங்களுக்கு 30.74 கோடி ஒதுக்கீடு.

  • உள்ளிட்ட 17 அறிவிப்புகள் உயர்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்.

No comments:

Post a Comment