- ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.
- கடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.
- ஊதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களின் நிலுவைகளை (அரியர்ஸ்) ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டு காலத்திலேயே (2016-17) வழங்குவது எனவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். இதில், 47 லட்சத் துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் உள்ளனர்.
- சிறப்பம்சங்கள்:
- தற்போது நடைமுறையில் உள்ள சம்பள விகிதம் மற்றும் தர ஊதியத்தை, ஆணையம் பரிந்துரைத்துள்ள புதிய ஊதிய கணக்கீட்டின்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் நிலை, அதாவது தர ஊதியம் நிர்ணயிக்கப்படுவது என்பது, தற்போது ஊதிய கணக்கீட்டு அளவுப்படி நிர்ணயிக்கப்படும். அரசு துறையில் இருப்பவர்கள், பாதுகாப்புப் படையினர், ராணுவ செவிலிலியர் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தனித்தனியாக ஊதிய கணக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடுகளின் கொள்கை ஒரே மாதிரியானது.
- நடைமுறையில் உள்ள அனைத்து அளவுகளும், புதிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அளவு எதுவும் உருவாக்கப்படவில்லை.அதேபோல, எந்த அளவும் நீக்கப்பட வில்லை. ஒவ்வொரு பதவியிலும் பணியில் அதிகரிக்கும் பங்களிப்பு, பொறுப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக சீரான குறியீட்டை பின்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- * குறைந்தபட்ச ஊதியம் மாதத்துக்கு ரூ.7000-லிலிருந்து ரூ.18,000-மாக உயர்த்தப் பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்க்கப் படும் ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-மாக இருக்கும். அதாவது, கீழ்நிலையில் முதல்முறையாக சேரும் ஊழியரைவிட, நேரடியாக தேர்வுசெய்யப்படும் முதல் வகுப்பு அதிகாரிக்கு மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும்.
- * ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்துக் காக, தகுதிநிலைகாரணி (fitness factor) 2.57-ஆக இருக்கும். அதாவது, ஊதியம் 2.57 மடங்காக உயரும். இது அனைத்து மட்டத்துக்கும் பொருந்தும்.
- ஊதிய உயர்வு விகிதம், 3%-ஆக நீடிக்கும். எனினும், அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு தற்போது கிடைப்பதைவிட 2.57 மடங்காக ஊதிய உயர்வு கிடைக்கும்.
- பாதுகாப்புத் துறையினருக்கான ஊதிய கணக்கீட்டில், கூடுதல் பிரிவுகளை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பணிக்கொடைக்கான (Gratuity) வரம்பு ரூ.10 லட்சத்திலிலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி50% உயரும்போதெல்லாம், பணிக்கொடையின் வரம்பு 25% அதிகரிக்கும்.
- அரசு ஊழியர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே கட்டமாக வழங்கப்படும் நிவாரண நிதி, பல்வேறு பிரிவுகளில்தற்போதுள்ள ரூ.10 லட்சம் ரூ.20 லட்சம் என்பது, ரூ.25 லட்சம் ரூ.45 லட்சமாக இருக்கும்.
- மருத்துவமனை விடுப்பு, சிறப்பு உடல்ஊன விடுப்பு, உடல்நலக் குறைபாட்டு விடுப்பு ஆகியவை ஒரே பெயரில், அதாவது, பணி தொடர்பான உடல்நலக் குறைபாடு மற்றும் காய விடுப்பு (Work Related Illness and Injury Leave) என்று அழைக்கப்படும். இந்த விடுப்பு எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், மருத்துவமனையில் இருக்கும் காலம் முழுமைக்கும் முழு ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.* தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 வகையான வட்டியில்லா முன்பணம் தொடரும். அதாவது, மருத்துவ சிகிச்சை,சுற்றுலா அல்லது பணிமாற்றத்துக்கான போக்குவரத்துப்படி, உயிரிழந்த ஊழியர் களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துப்படி, எல்.டி.சி. ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும். மற்ற வட்டி இல்லாத முன்பணங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.
- மத்திய அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தில் (CGEGIS) ஊழியர்களின் மாதாந்திர பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஊதிய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில்லை என்று அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
- ஓய்வூதியம் மற்றும் அதுதொடர்பான பலன்களுக்காக ஆணையம் வழங்கியுள்ள பொதுவான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஆணையம் வழங்கிய அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.
- ஓய்வூதிய மாற்றம் தொடர்பான இரண்டாவது பரிந்துரையான 2.57 மடங்கு அளவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை, உடனடியாக அமல் படுத்தப்படும். முதலாவது வழிமுறையை பின்பற்றுவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க குழு அமைக்கப்படும்.
- இந்தக் குழு தனது அறிக்கையை 4 மாதங்களில் அளிக்கும்.அதில், முதலாவது வழிமுறையை அமலாக்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தால், அது அமல்படுத்தப்படும்.
- ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 196 வகையான படிகளையும் ஆணையம் ஆய்வுசெய்தது. இதனை சீராக்கும் வகையில், 51 படிகளை நீக்கவும்,37 வகையான படிகளாக ஒன்றிணைக்கவும் பரிந்துரைத்து உள்ளது. இதனை அமல்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருப்பதால், படிகள் தொடர்பாக 7-வது ஊதிய ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை விரிவாக ஆய்வுசெய்ய நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழுவை அமைக்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தக் குழு தனது பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, 4 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள படிகள் அனைத்தும், தற்போதைய அளவிலேயே வழங்கப்படும்.
- இரண்டு தனிப்பட்ட குழுக்களை அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இதில், ஒன்று, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரை களை வழங்கும். இரண்டாவது, 7-வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதால் எழும்பிரச்சினைகளை ஆராயும்.
- ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிறபரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், நிர்வாக அடிப்படையில், தனிநபர் பதவி விவகாரங்களில் எழும் பிரச்சினைகளை அந்தந்த அமைச்சகங்களே ஆய்வுசெய்வது என மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. ஏனெனில், இந்த விவகாரத்தில் ஊதிய ஆணையத்தால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.
- ஏழாவது மத்திய ஊதிய ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்துவதால், 2016-17-ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.1,02,100 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-16-ஆம் நிதியாண்டில் இரண்டு மாதங்களுக்கு ஊதியம்மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதால், ரூ.12,133 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment