Labels

rp

Blogging Tips 2017

பள்ளியில் தேசிய கீதம் பாட அனுமதிக்காததால் 8 ஆசிரியர்கள் ராஜிநாமா!

உத்திரபிரதேசம் மாநிலம், அலகாபாத் அருகே சாய்தாபாத் பகாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேசிய கீதம் பாட நிர்வாகம் அனுமதிக்காததால், பள்ளியின் தலைமை ஆசிரியை உட்பட 8 ஆசிரியர்கள் பணியை ராஜிநாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய்தாபாத் பகாராவில் எம்.ஏ., கான்வென்ட் என்ற தனியார் நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நர்சரி முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. 330 குழந்தைகள் படித்து வருகின்றனர். 20 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பயிற்சி நடந்தது. அதில் தேசிய கீதம் பாடவும் இசைக்கவும், பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷம் எழுப்பவும் தடை விதித்து பள்ளி மேலாளர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தேசிய கீதம் மற்றும் தேசப்பற்று கற்பிக்காமல், வேறு எதனை குழந்தைகளுக்கு கற்பிப்பது. பள்ளி நிர்வாகத்தின் தடை ஏற்றுக்கொள்ள முடியாதது எனக்கூறி முதல்வர் உள்பட 8 ஆசிரியர்கள் தங்களது பணியை ராஜிநாமா செய்து பள்ளியைவிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரிது சுக்லா கூறுகையில், வியாழக்கிழமை அன்று சுதந்திர தினவிழா பயிற்சியின்போது பள்ளி நிர்வாகி தேசிய கீதம் மற்றும் கொடி வணக்கப்பாடல்களை பாட பள்ளி நிர்வாகி அனுமதிக்கவில்லை. நான் தேசபக்தி பாடல்களை பாட தடைவிதிக்கலாமா என்று கேட்டேன். அது ஓரு குறிப்பிட்ட சமுகத்திற்காக பாடப்படுவது எனக் கூறினார். இதையடுத்து நாங்கள் பணியை ராஜிநாமா செய்தோம் என்று கூறினார்.
இதுகுறித்து பேசிக் சிக்ஷா அதிகாரி கூறுகையில், எந்த பள்ளி மேலாளரும் மாணவர்களை தேசிய கீதம் பாட தடை செய்ய முடியாது. அவர் கூறியது உண்மை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தலைமை செயலர் தீபக் சிங்கால் கூறுகையில், இது சம்மந்தமாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேசிய கீதம் பாட அனுமதிக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து 8 ஆசிரியர்கள் பணியை ராஜிநாமா செய்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பள்ளியின் முன்பாக திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது.

No comments:

Post a Comment