Labels

rp

Blogging Tips 2017

அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் அரசுப் பள்ளிகள்: சகாயம் பெருமிதம்

அரசுப் பள்ளிகள் மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழி கொண்டு செல்லப்படுகிறது என்று, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் அரசுப் பள்ளிகளின் சாதனை விழா, திருப்பூர் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. வி.செ.வேலிறையான் தலைமை வகித்தார். ‘மக்கள் பாதை’ அமைப் பின் தலைவர் செ.நாகல்சாமி முன்னிலை வகித்தார்.

சாதனை புரிந்த அரசுப் பள்ளிகள், மாணவர்களுக்கு அறிவியல் நகர துணைத் தலைவர் உ.சகாயம் ஐ.ஏ.எஸ். பரிசு வழங்கிப் பாராட்டினார்.
அவர் பேசும்போது, “அரசுப் பள்ளிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கிராமப்புறங்களிலுள்ள பள்ளி களுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவேன். அவர்களி டம், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்பேன். அதற்கு, அவர்கள் சமாளித்து பதில் சொல்வார்கள். பல குழந்தைகள் சாமர்த்தியமாக பதில் சொல்வார்கள். அந்த தைரியம், மன ஆற்றலை தாய்மொழிக் கல்வி தான் தரும். ஆங்கில ஆற்றல் தேவைதான். ஆனால், மோகம் தேவை இல்லை.
நேர்மையாக இருப்பதால் அடிக்கடி இடம்மாற்றம் செய்யப்படலாம். 2010-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர்களை கிராமத்துக்குச் செல்லுங்கள் என்று கூறியதால், இடமாற்றம் செய்யப்பட்டு 2 மாதங்கள் பணி வழங்கப்படாமல் இருந்தேன். இடமாற்றம் செய்யப்படுவதால் கவலை இல்லை. என்னை இடமாற்றம் செய்யலாம். ஆனால், என் கொள்கையை இடமாற்றம் செய்ய முடியாது. பணி செய்யும் இடம் மாறலாம்; இதயத்தை மாற்ற முடியாது.
கிரானைட் முறைகேடு தொடர் பாக விசாரிக்கச் சென்றபோது சுடுகாட்டில் படுத்திருந்தேன். அங்கு எனக்குப் பயம் இல்லை. ஆனால், சுதந்திர நாட்டில் பயம் உள்ளது. அப்துல்கலாம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர் பணியை பெரிதாக மதித்தவர்கள்.
ஆசிரியர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக இருந்தால்தான் சமுதாயம் முன்னேறும். அரசுப் பள்ளிகள் மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழி கொண்டு செல்லப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழிக் கல்விக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அனைத்து உதவிகளையும் அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்” என்றார்.
‘லஞ்சம் இல்லாத திருப்பூர்’
இதைத்தொடர்ந்து, நேர்மை மக்கள் இயக்கம் சார்பில் நடந்த ‘லஞ்சம் இல்லாத திருப்பூர்’ விழிப்புணர்வுப் பரப்புரையை ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தொடங்கி வைத்தார்.
நேர்மை மக்கள் இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி தலைமை வகித்தார். மு.திருப்பதி வரவேற்றார்.
மணல் திருட்டுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் தெ.பிரபாகரன் பாராட்டப்பட்டார்.
பொய்யுரை
பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் கிராமத்திலுள்ள தாய்த் தமிழ் பள்ளியில், தமிழ் வழி கல்வி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் மரக்கன்றை நட்டு பேசும்போது, “தாய்மொழிக் கல்விதான் மாணவர்களின் சிந்தனையை வளர்க்கிறது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வில் தாய்மொழியில் தன்னுடைய கருத்துகளை முழுமையாகத் தெரிவிக்க முடியும். பிறமொழிகளில் மனப்பாடம் செய்யப்படும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளது. ஆனால், உலகம் முழுவதும் ஆங்கிலம் உள்ளதுபோல் பொய்யுரை பரப்புகிறார்கள். நேர்மை என்பது தனிமனிதன், அதிகாரிகளை பொறுத்தது கிடையாது. அது சமூகத்திலிருந்து வர வேண்டும். நேர்மையான சமூகம் உருவானால், நேர்மையான அதிகாரிகள், அரசு உருவாகும்” என்றார்.

No comments:

Post a comment