Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ரூ.130க்கு 100 சேனல்கள்: டிராய் பரிந்துரை

துடில்லி : ரூ.130க்கு 100 சேனல்களை வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) பரிந்துரை செய்துள்ளது.


விலை நிர்ணயம்:

இதுதொடர்பாக புதிய வரைவு விலைப்பட்டியல் உத்தரவை டிராய் நேற்று(அக்.,12) வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ளதாவது: அனைத்து வீடுகளுக்கும் 100 சேனல்களை ரூ.130க்கு சேனல் வினியோகஸ்தர்கள் வழங்க வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல்களுக்கும் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். சேனல்களை வகைப்படுத்தி அதற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அந்த வரைவு விலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆலோசனைகள்:

புதிய வரைவு விலைப்பட்டியல் குறித்து ஆலோசனைகளை சேனல் வினியோகிப்பவர்கள், வரும் 24ம் தேதிக்குள் வழங்குமாறும் டிராய் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment