Labels

rp

Blogging Tips 2017

'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்

'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் நவ.16 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான 'நெட்' தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படும்.


2016-ம் ஆண்டுக்கான 2-வது தேர்வு டிசம்பர் மாதத்துக்குப் பதில் சற்று தாமதமாக ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. 'நெட்' தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம், பொது நிர்வாகம், வணிகவியல், சட்டம், இதழியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும், தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.

தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் (www.cbsenet.nic.in) பதிவு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 16-ல் முடிவடைகிறது. தேர்வுக்கான முழுவிவரங்கள் அடங்கிய விரிவான அறிவிப்பு வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

No comments:

Post a comment