Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி : அவசர சட்டம் பிறப்பிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தனி அதிகாரியை நியமனம் செய்ய, கவர்னர் வித்யாசாகர் ராவ், அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், வரும், 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம், நடவடிக்கை மேற்கொண்டது.

வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், பொது நல வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்த தடை விதித்தது.மேலும், 'இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தி, புதிதாக தேர்தல் தேதி அறிவித்து, டிச., 31க்குள், தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததும், பணிகளை மேற்கொள்ள, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. தற்போது, சட்டசபை நடைபெறாத தால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தனி அதிகாரியை நியமிக்க, கவர்னர் வித்யா சாகர் ராவ், அவசர சட்டம் பிறப்பித்து உள்ளார். அதன்படி, உள்ளாட்சி அமைப்பு களின், முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து, தனி அதிகாரிகள் பொறுப்புக்கு வருவர். அவர்கள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும் வரை அல்லது டிச., 31 வரை, பதவியில் இருப்பர்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, கிராம ஊராட்சி அனைத்தும், தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வரும். இவ்விபரம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment