Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவை?: ஆய்வு குழுவில் 3 கல்வியாளர்கள் சேர்ப்பு


அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும் என்பது குறித்த ஆய்வு நடத்தும் குழுவில் 3 கல்வியாளர்களை சேர்க்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத, அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிக்குலேசன் பள்ளிகளை மூடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பாடம் நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா நேரில் ஆஜரானார். விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர், ‘ஒரு வகுப்பிற்கு தேவைப்படும் நிலத்தின் அளவை தீர்மானித்து, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 5 பிரிவுகள் வரை உள்ளன.
இந்த பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டுள்ளோம். இது சம்பந்தமான அறிக்கையை சம்பந்தப்பட்ட குழு முன்பு வைத்து பின் உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘அரசு அமைத்துள்ள குழுவில் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். கல்வியாளர்கள் யாரும் இல்லை. அதனால், 3 கல்வியாளர்களை இந்த குழுவில் சேர்க்கிறோம். அவர்களது பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும், ஏற்கனவே இந்த விவகாரத்தில் போதுமான கால அவகாசத்தை அரசுக்கு வழங்கி விட்டோம். இனியும் கால அவகாசம் கேட்பது சரியானதாக இருக்காது.
எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்

No comments:

Post a Comment