Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வகுப்பறை கடந்த கற்பித்தல் முறை அவசியம்!

தொழில் நுட்ப திறன் கொண்ட பட்டதாரிகளின் தேவை, 21ம் நுாற்றாண்டில் அதிக அளவில் எழும்.

கல்விநிறுவனங்கள் வகுப்பறை தாண்டிய தொலைநோக்கு செயல்வழி கற்பித்தல் மூலம், மாணவர்களின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்தவேண்டும் என, வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் குணசேகரன் பேசினார்.

கோவை அவினாசி ரோட்டில் அமைந்துள்ள, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் உயிரி வேதியியல் துறை மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், மாநில அளவிலான ’புத்தாக்க அறிவியல் பயிலரங்க முகாம்’ நேற்று துவங்கியது. ஐந்து நாள் பயிலரங்கம், 26ம் தேதி நிறைவடைகிறது.

வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் குணசேகரன் நிகழ்ச்சியை துவக்கிவைத்து பேசியதாவது:

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறிவியலை பொறுத்தவரையில் வகுப்பறை தாண்டிய செயல்வழி கற்றல் - கற்பித்தல் முறை அவசியம். 21ம் நுாற்றாண்டில், தொழில்நுட்ப சார்ந்த பட்டப் படிப்பை முடித்தவர்களின் தேவை அதிக அளவில் ஏற்படும்.

தொலை நோக்கு பார்வையுடன் கல்வி நிறுவனங்கள் செயல்வழி கற்றல் முறையில், மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த முன்வரவேண்டும்.

சமூக, பொருளாதார, சுற்றுப்புற சூழல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சிகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

பயிலரங்கில், வல்லுனர்களின் ஆய்வு கட்டுரைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. மேலும், அறிவியல் தொழில்நுட்பம் மையமாக கொண்ட வினாடி-வினா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment