rp

Blogging Tips 2017

ரூ.60 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள்!

ரூ.60 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள்!தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின் விழாவில் அவர் பேசியதாவது, “ஆண்டுதோறும் தமிழ்வழி கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள், மாவட்டத்துக்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குக் காமராஜர் விருது வழங்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்குக் காமராஜர் விருதுடன், ரூ.10 ஆயிரமும் ப்ளஸ் டூ தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவ மாணவிகளுக்குக் காமராஜர் விருதுடன் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் அவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தமிழக மாணவர்கள் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 54,000 கேள்விகள் கொண்ட பயிற்சி புத்தகம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் எந்த போட்டித் தேர்விலும் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்” என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment