இடைநிலை ஆசிரியர்களுக்குள்ளேயே
உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி சென்னையில் 2009 க்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை
ஆசிரியர்கள் தொடர் உண்ணாநிலை ப்போராட்டம் இருந்து
வருகின்றனர்.இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது
. இந்நிலையில் போராடும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுடன் நேற்று கல்வி இயக்குனர் பேச்சு
நடத்தியதும் அது முடிவு எட்டப்படாமல் முடிந்ததும் அறிய முடிந்தது. இப்பிரச்சினையின்
தீவிரத்தினை உணர்ந்தும், போராட்டக்களத்தில் பல பெண் ஆசிரியர்கள் உட்பட 60 க்கும்மேற்பட்டோர்
உடல்நிலை பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு இயக்குனர்,கல்வித்துறை செயலர் போன்ற அதிகாரிகள்
அளவிலான பேச்சுவார்த்தைகளை தவிர்த்து கல்வித்துறை அமைச்சர் அவர்களே முதல்வர் மற்றும்
நிதி அமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் நேரடியாக தலையிட்டு தம் தலைமையில் அதிகாரிகள்
மற்றும் போராட்ட அமைப்பாளர்களுடன் பேசி போராட்டத்திற்குண்டான
கோரிக்கைகள் மீது தீர்வுகாண வேண்டும் என கல்வி அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி
Ex.MLC அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வறிக்கை fax & email மூலம் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது
No comments:
Post a comment