Labels

rp

Blogging Tips 2017

இடைநிலை ஆசிரியர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த கல்வி அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC.

இடைநிலை ஆசிரியர்களுக்குள்ளேயே உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி சென்னையில் 2009 க்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாநிலை ப்போராட்டம் இருந்து வந்தனர்.
இப்பிரச்சினையின் தீவிரத்தினை உணர்ந்தும், போராட்டக்களத்தில் பல பெண் ஆசிரியர்கள் உட்பட 100 க்கும்மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு கல்வித்துறை அமைச்சர் அவர்களே நேரடியாக தலையிட்டு அமைப்பாளர்களுடன் பேசி தீர்வுகாண வேண்டும் என கல்வி அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் நேற்று காலை வேண்டுகோள் விடுத்த நிலையில்
மாலையில் கல்வி அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் யாரும் எதிபாராவண்னம் போராட்டக்களத்திற்கே வந்து பேச்சு நடத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று கோரிக்கையை நிறைவேற்ற உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அமைச்சரின் நேரடியான நடவடிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நெஞ்சார மனத்துடன் பாராட்டும் ,நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் உறுதி அளித்தவாறு அரசே முன்னின்று கோரிக்கையைஉடன் நிறைவேற்ற வேண்டுகிறது.
களம் கண்ட இடைநிலை ஆசிரிய
இளம் ஆசிரியர்களின்
போராட்டக்குணம்,
விடாமுயற்சி,

மன உறுதி,
கொண்ட எண்ணத்தில் எது நடப்பிலும் உறுதி
,ஆகியவற்றால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.
ஆசிரிய இனத்தின் போராட்ட குணம்
மீண்டும் வெளிப்படுத்தியமை பாராட்டும் நன்றிக்கும் உரியதானது என்பதில் ஐயமில்லை

.இப்போர்க்குணம் மேலும் பல கோரிக்கைகள் வெற்றிபெற முன்னெடுப்பாகா அமையும் என வாழ்த்துகிறேன்
என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC.அவர்கள் தனதுஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LikeShow more reactions

No comments:

Post a Comment