Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஜாக்டோ ஜியோவின் மீது...அரசுக்கு பயம் எந்த அளவு இருந்தது

இது தலைமைச் செயலகம் முன் சென்னை காவல்துறை வைத்துள்ள தடுப்பணை. வழக்கமான முறையைக் காட்டிலும் கம்பிகளைச் சுற்றி இப்படி ஏராளமான காவலர்கள் மத்தியில் இவற்றையும் நிறுத்தியுள்ளனர்.

தடியடி ஏதும் நடத்தி சூழ்ந்துள்ள மக்களை விரட்டும் நிலை ஏற்பட்டால் இத்தகைய கம்பிகள் கட்டப்பட்ட  barricades உயிர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தும் உண்டு.

வேறு எந்த மாநிலத்திலும் இப்படியான கொடுமைகள் இல்லை. போகிற போக்கைப் பார்த்தால், வெறும் கம்பிகளை மட்டும் இல்லாமல் பாதுகாப்பு என்கிற பெயரில் மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளைக் கூடப் பயன்படுத்துவார்களோ என்கிற ஐயம் எல்லாம் ஏற்படுகிறது.





ஜனநாயத்தில் போராட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல், முற்றுகை எல்லாம் ஓரங்கம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தம் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை இன்று அறிவித்துள்ளனர். 90 களில் இதே போல அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு (JACTEA) போராட்டங்கள் எல்லாம் பலமுறை சென்னையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. எந்த அரசும் இத்தனை குரூரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வரலாறே இல்லை 

இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சுங்கச் சாவடிகளிலேயே முற்றுகைப் போராட்டத்திற்காகப் புறப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆங்காங்கு கைது செய்யப்பட்டு "போராட்டம் ஒடுக்கப்பட்டது" எனத் தலைப்புச் செய்தி வெளியிடுகின்றனர்.

MarksAnthoniSamy facebook
(படங்கள் : நன்றி விகடன்)

No comments:

Post a Comment