Labels

rp

Blogging Tips 2017

செயல்வீரர் செமு அவர்களுக்கு -(10/03/2019)இன்று 83 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர்  மதிப்புமிகு செ.முத்துசாமி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!!!!

                   "எமக்குத் தொழில், ஆசிரியர்க்கு உழைத்தல்
                               இமைப்பொழுதும் சோராது இருத்தல்" 
                                                                                               செ.முத்துசாமி



செயல்வீரர் செமு , இயக்கச்செம்மல் என நல்லோர்களால் போற்றப்படும் செ.முத்துசாமி - தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் மரூர்பட்டி என்ற சிற்றூரில் 10-03-1937 பிறந்தார். தன்னுடைய பேச்சாற்றலாலும், சீரிய சிந்தனையாளும் 1968 முதல் ஆசிரியர் கூட்டணியில் பொதுச்செயலாளராக பணியாற்றுகிறார். மேலும்1970 முதல் தமிழ்நாடு அரசு மேலவை உறுப்பினராக ஆசிரியர் தொகுதியில் 12 ஆண்டுகள் தொண்டாற்றினார்.

ஆசிரியர் இனக் காவலராகத் திகழும் இவர் தன்னைச் சார்ந்த ஆசிரியர்களை, ஒழுக்கத்தோடு ஆசிரியப்பணி ஆற்ற வழிகாட்டுகிறார். நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் பண்பையும் சுய மரியாதையுடனும் பகுத்தறிவுடன் கூடிய வாழ்க்கை வாழவும் , அதிகார வர்க்கம் நடத்திடும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் "கடமையைச் செய்து உரிமையைக் கேட்கும் துணிச்சலையும் வளர்க்கிறார்"
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது -- 
என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழும்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர்  மதிப்புமிகு செ.முத்துசாமி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்


No comments:

Post a Comment